மகிந்தவை நலம் விசாரிக்க விரைந்த ரணில்!
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தங்காலையில் உள்ள மகிந்தவின் கார்ல்டன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள்
அதன்போது, முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரும் ரணிலுடன் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், காலி, ஹினிதும மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமானோர் இன்று (28) மகிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க தங்காலைக்கு பேருந்தில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
