பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்
பங்களாதேஷ் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரணில் கடந்த சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தார்.
விவசாய நவீனமயமாக்கல்
இந்த நிலையில், அந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு புதுடில்லியில் (New Delhi) இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது இலங்கையில் (Sri Lanka) செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |