அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அதிபர் ரணில் மீண்டும் அழைப்பு
நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாக அதிபர் வலியுறுத்தினார்.
அநுராதபுரத்தில் இன்று (15) நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
விவசாயத்திற்கு பாதிப்பில்லை
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டினார்.
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இந்த திட்டத்தினால் விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தான் உறுதியளிப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா(JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஜெய்கா தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |