மொட்டுவின் அதிபர் வேட்பாளர் பட்டியலில் ரணில் : நாமல் அறிவிப்பு
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
அடுத்த அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க இன்னும் அதிபர் அலுவலகத்தில் இருப்பதால் அவரின் பெயரும் அந்த பட்டியலில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் பல பெயர்கள்
அந்த பட்டியலில் மேலும் பல பெயர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா
இதேவேளை பொதுஜன பெரமுன சார்பில் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி