அதிபர் தேர்தல் : மொட்டு ரணில் தீர்க்கமான பேச்சு ஆரம்பம்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
அந்த கலந்துரையாடலின் முடிவுகளின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நிச்சயமாக அறிவிக்கப்படுவார்.
பொதுஜன பெரமுனவின் கொள்கை
இக்கலந்துரையாடலில் பொருளாதாரம் மற்றும் பொதுஜன பெரமுனவின் கொள்கை தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமல் ராஜபக்சவின் எதிர்பார்ப்பு
எவ்வாறாயினும், கடனை செலுத்தி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவர் தொடர்பில் கட்சி கவனம் செலுத்துவதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி