சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பகிர்வு - ரணில் வெளியிட்ட தகவல்
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பகிர்வு
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து திறமைகளின் அடிப்படையில், அமைச்சுப் பொறுப்புக்களை பகிர எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு நாராஹென்பிட்டி எலிப்பிட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமஞ்ஞை நிக்காய பௌத்த பீடத்தின் தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு, மகுலேவே விமல தேரரைச் சந்தித்து ஆசிய பெற்றுக்கொண்டதுடன், பௌத்த பிக்குகளை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் தற்போது சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சரியான வேலைத்திட்டத்தை நாட்டுக்காக முன்வைத்தல்
அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இந்தக் கட்சிகளில் பல்வேறு கொள்கைகளை கொண்ட அணிகள் இருக்கின்றன.
பேச்சுவார்த்தையில் பெரும்பான்மையான நிலைப்பாடுகளுக்கு இடமளித்து, சரியான வேலைத்திட்டத்தை நாட்டுக்காக முன்வைப்பது இதன் நோக்கம்” என அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.