நாட்டின் முக்கியப் பிரச்சினை கடன் திருப்பிச் செலுத்துவதே! ரணில் சுட்டிக்காட்டு
அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதா என்பது இந்த நாட்டின் பிரதான பிரச்சினை அல்ல, மாறாக சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதே ஆகும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய எழுதிய 'யுத கியாகய உர தி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று(18.08.2026) கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு மீண்டும் திவாலாகிவிடும்
கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்த விவாதங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதி இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நாடு மீண்டும் திவாலாகிவிடும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி, 2028-ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் ரூபாயைத் திரட்ட வேண்டியிருக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |