பொதுத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு
பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் (22.07.2024) நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர், “பொதுத் தேர்தல் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூறி வருகின்றனர்.
பொதுத் தேர்தல்
பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு போதியளவு பணமில்லை. அதாவது நிதி ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |