ரணில்- சஜித்- மகிந்த கூட்டணி : வெளியான அதிரடி அறிவிப்பு
சஜித் பிரமேதாஸ (Sajith Pramedasa), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (23) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்தி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “சஜித், மகிந்த, ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
அப்பட்டமான பொய்
இது அப்பட்டமான பொய்யாகும், ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை.
இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
