அவசரமாக சஜித்துக்கு ரணில் அனுப்பிய கடிதம்!

SJB Ranil Wickremesinghe Sajith Premadasa Prime minister Sri Lankan political crisis
By Kanna May 14, 2022 07:18 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாகவும் சஜித்துக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவசரமாக சஜித்துக்கு ரணில் அனுப்பிய கடிதம்! | Ranil Sajith Sjb Sri Lankan Political Crisis

முன்னராக சஜித் பிரேமதாசவை பிரதமராக  பதவியேற்குமாறு முன்னராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

இருப்பினும், சஜித் பிரேமதாச அரச தலைவரின் அழைப்பை கோட்டாபய பதவி விலகினாலே பிரதமராக பதவியேற்பேன் எனும் நிபந்தனையுடன் அரச தலைவரின் அழைப்பை மறுத்திருந்தார்.

பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய பின்னர் பிரதமராக பதவியேற்க தயார் என சஜித் பிரேமதாச அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், சஜித்தின் குறித்த கடிதத்திற்கு "டூ லேட்" என அரச தலைவர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

ரணில் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. .  


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026