அதிபர் அனுப்பிய இரகசிய செய்தி விரக்தியில் மகிந்த
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுப்பிய இரகசிய செய்தியினை தொடர்ந்து அவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசியமான செய்தி குறித்து இதுவரையிலும் எந்த செய்தியும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச்செய்தி கிடைத்தவுடன் மகிந்த அதிகமாக வெளியே வராததோடு, மனவருத்தத்தோடு இருந்ததாக அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
விரக்தி நிலையில் மகிந்த

மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு அதிபரின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன். மகிந்தவை தவிர இச்செய்தி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் கிடைத்திருக்கலாம் என நம்பப்டுகின்றது.