சிறிலங்கா அதிபருக்கு கறாரான செய்தி

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe
By Vanan Jul 30, 2023 09:01 AM GMT
Report

1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உணர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது முழுமையான தோல்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார தோல்விக்கான பழி

சிறிலங்கா அதிபருக்கு கறாரான செய்தி | Ranil Should Realize Longer Rule The Country

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1980 களுடன் ஒப்பிடும்போது உலகமும் சமூகமும் இப்போது முற்றிலும் மாறிவிட்டன.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சாதாரண மக்கள் பொறுப்பல்ல. பொருளாதார தோல்விக்கான பழியை ஆட்சியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார குற்றங்களுக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்களை ஒருங்கிணைத்து போராடவும், அவர்களை வெளியேற்றவும் உரிமை உள்ளது. மக்களின் போராட்டத்தை தடுக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதற்கு ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதிபரின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நகர்வுகளை முறியடிக்க நாங்கள் மக்களுடன் நிற்போம்.

மக்கள் புரட்சி

சிறிலங்கா அதிபருக்கு கறாரான செய்தி | Ranil Should Realize Longer Rule The Country

நியாயமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களை நசுக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் எழுச்சியைத் தடுக்க அரசாங்கம் களம் அமைத்து வருகிறது.

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதைக் காட்டுவதற்கான அரசாங்கத்தின் தோல்வியுற்ற முயற்சியை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

மத்திய வங்கி அறிக்கை

சிறிலங்கா அதிபருக்கு கறாரான செய்தி | Ranil Should Realize Longer Rule The Country

சமீபத்திய மத்திய வங்கியின் அறிக்கை நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன, இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் நெருக்கடியில் உள்ளன. இந்த நிலைமையை இனியும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.

ஊடகவியலாளர்களை வேட்டையாடத் தொடங்கிய அரசாங்கம்

சிறிலங்கா அதிபருக்கு கறாரான செய்தி | Ranil Should Realize Longer Rule The Country

அரசாங்கத்திற்கு எதிராக பேசி நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவரை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025