பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம்! ரணில் அறிவுறுத்தல்

srilanka covid19 corona ranil
By S P Thas May 24, 2021 05:42 AM GMT
Report

பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொவிட் கட்டுப்படுத்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களால் அதனை வெற்றிகரமாக செய்ய முடியாது. எனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சரவையும் ஜனாதிபதியும் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடுப்பூசிகளைப் வழங்க முடியாது என்பதால் , வைரஸ் மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் போது மருத்துவ ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டுக்கு 3 கோடி கொவிட் தடுப்பூசிகள் தேவையாகவுள்ளது. எனினும் அந்த தொகை முழுவதையும் இவ்வருடத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும்.

எனவே புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முதற்கட்டமாக அஸ்டராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக துரிதமாக வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

எவ்வாறிருப்பினும் இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடுப்பூசிகளைப் வழங்க முடியாது என்பதால் , வைரஸ் மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் போது மருத்துவ ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம். மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டமையின் காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பரில் 20 கோடி டொலர் தடுப்பூசிக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தால், இந்த நாட்டில் இன்று தடுப்பூசி பிரச்சினை இருந்திருக்காது.

அந்நிய செலாவணியை ஈட்டுவதாகக் குறிப்பிட்டு நாம் இந்த வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவ இடமளித்துள்ளோம். எனவே வெறுமனே குழுக்களால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டை மூட வேண்டிய தேவை ஏற்பட்டால், நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு அதனை வழங்க வேண்டும்.

அமைச்சரவையும் ஜனாதிபதியும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உபயோகித்து கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும். அமைச்சரவையை இழிவுபடுத்த வேண்டாம். நாட்டின் சுகாதார பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதன் மூலம் நாட்டையும் மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025