பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe,) பங்களாதேஷின்(Bangladesh) இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துள்ளார்.
அதன்போது,பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ரணில் உறுதி
பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கேயே தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி, மொஹமட் யூனுஸிடம்(Muhammad Yunus) தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்கும் உறுதியளித்துள்ளார்.
இதற்கு பங்களாதேஷ் இடைக்கால தலைவர், ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுக்க தேவையான வழிகாட்டுதலை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |