மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த ரணில் !
Ranil Wickremesinghe
Jeevan Thondaman
India
UNP
By Kanooshiya
Courtesy: Nayan




இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம் சனிக்கிழமை (22.11.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசித்துள்ளனர்.
இதன்போது, இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சுவாமி தரிசனம்
அம்மன் சந்நதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து சுந்தரேஸ்வரர்சந்நதியில் சுவாமி தரிசனத்தை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் இந்திய ஊடகங்களுக்கு எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்