ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாடு : ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவுகள்!
டுபாயில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய மூன்று முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி, இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைப்பது, வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் சிரமப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கான வெப்ப மண்டல பெல்ட் மன்றத்தை நிறுவுதல் ஆகிய முன்மொழிவுளை அவர் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்கவுடன் 20 இளைஞர் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காலநிலை தொடர்பான மாநாடு
ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இதில் 136 உலகத்தலைவர்கள் பங்கேற்கவுள்ளதுடன், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளார்.
இதுவரை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பதன் முக்கிய நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்