கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் - அதிபர் கண்டனம்
Ranil Wickremesinghe
Sweden
By Beulah
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈத் அல் அதா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஸ்வீடனில் உள்ள மசூதிக்கு வெளியே புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை "வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாக" கருதுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜூன் 28 அன்று, ஸ்வீடனில் வசிப்பதாகக் கூறப்படும் சல்வான் மோமிகா என்ற ஈராக்கியர், ஸ்டாக்ஹோமில் உள்ள மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலின் நகலை எரித்தார்.
இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே கோபத்தைத் தூண்டியது.
பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளித்தல்

இந்நிலையில், தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி