இன மத பேதமின்றி ரணில் சேவை புரிவார்! - விஜயகலா
Mrs Vijayakala Maheswaran
Ranil Wickremesinghe
Prime minister
UNP
By Kanna
இன மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார் .
ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"நாடாளுமன்ற தேர்தலின் போது நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மூவின மக்களுக்கும் தற்போது நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியினை ஏற்றுள்ளார்.
வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள் என்ற பிரிவினை காட்டாது அனைத்து மக்களுக்கும் அதாவது மூவின மக்களுக்கும் இன மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக நாட்டிற்கு சேவை புரிவார் எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை", எனக் குறிப்பிட்டார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி