வடக்கு மக்களிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) வடக்கில் உள்ள மக்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), தென்னிலங்கை மக்கள் பின்பற்றும் அதே முறையை வடக்கு மக்களிடமும் பின்பற்றுமாறு கடந்த நாள் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச
“2010 இல் சரத் பொன்சேகாவுக்கு(Sarah Fonseka) நீங்கள் வாக்களித்தீர்கள், தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) வாக்களித்தார்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, 2015 இல் நீங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு(Maithripala Sirisena) வாக்களித்தீர்கள் தென்பகுதி மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள்.எனினும், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
சஜித், கோட்டாபய ராஜபக்ச
2019 இல் நீங்கள் சஜித்துக்கு (sajith premadasa)வாக்களித்தீர்கள் ஆனால் தென்பகுதி மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு(gotabaya rajapaksa) வாக்களித்தார்கள். எனினும், கோட்டாபய ராஜபக்ச உங்களை துன்புறுத்தவில்லை. இந்த முறையை கடைப்பிடியுங்கள், உங்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று யாழ்ப்பாணத்தில்(jaffna) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அநுரகுமார கூறினார்.
இதற்கு பதிலளித்த ரணில்,அநுர குமார திஸாநாயக்க, தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதற்காக வடமாகாண மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக அவர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள், எனவே சஜித்துக்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |