பட்டப்படிப்பை முடித்தார் ரஞ்சன் ராமநாயக்க
Ranjan Ramanayake
Sri Lankan Actor
By Sumithiran
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தனது பட்டப்படிப்பை முடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக மேம்பாட்டில்

அவர் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவின்படி இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பொதுமன்னிப்பை அடுத்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி