அசோக ரன்வல மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா...! காவல்துறை வெளியிட்ட தகவல்
விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரில் பயணித்த சிறு குழந்தை
கடந்த வியாழக்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல செலுத்திச் சென்ற ஜீப் வண்டி, மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர்.

எவ்வாறாயினும், விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, அசோக ரன்வல விபத்தை ஏற்படுத்திய சந்தர்ப்பத்திலேயே மது போதையில் வாகனம் செலுத்தினாரா என்று பரிசோதனை நடத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் சட்டத்தரணி யோஹான் ஆரியவன்ச கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 13 மணி நேரம் முன்