சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamils Attorney General of Sri Lanka Law and Order Sri Lanka Prevention of Terrorism Act
By Theepan Jun 12, 2026 10:41 AM GMT
Report

புதிய இணைப்பு

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சாவகச்சேரி- நாவற்குழி ப பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளை நேற்றைய தினம் (11) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

 சட்டமா அதிபர் பணிப்பு 

இவ்வாறான நிலையில் இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது, தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு பணித்திருந்தார்.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Rap Singer Arrested In Sri Lanka Pta Remove

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன் 

முதலாம் இணைப்பு

சொல்லிசைப் பாடகர் வழக்கில் திருப்பம் : பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்

தாயக எழுச்சிப் பாடலை செம்மைப்படுத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சனின்  வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில் சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சொல்லிசைப் பாடகரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில்17ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்து வழக்கு இன்று (12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றம்! ஹக்கீமின் கருத்துக்கு ஆளும் தரப்பு பதில்

பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றம்! ஹக்கீமின் கருத்துக்கு ஆளும் தரப்பு பதில்

பிணை வழங்க வாய்ப்பு

இந்த நிலையில் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (11) நடைபெற்றது.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Rap Singer Arrested In Sri Lanka Pta Remove

அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி காவல்துறையினர் முற்படுத்தும் போது தாக்கல் செய்த B அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும், அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்மனு தாரர்களான, சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை விரைவில் அனுப்புமாறும், அறிவித்தல் திரும்பும் திகதியை இன்றைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திகதியாக மன்று குறிப்பிட்டு, அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வருண ஜயசுந்தரவின் கைது குறித்து சட்டமா அதிபரின் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவின் கைது குறித்து சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026