12 வயது சிறுமி வன்புணர்வு : 68 வயது முதியவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Sumithiran
மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கும்புக்கன அந்தரமண்டியில் வசிக்கும் 12 வயதும் 06 மாதங்களுமேயான சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த 68 வயதுடைய முதியவர் மொனராகலை காவல்துறையினரால் கடந்த (20) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் வந்து அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
68 வயதுடைய முதியவர்
சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய முதியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வன்புர்விற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்