வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு
தரம் குறைந்த மருந்துகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த மருந்துகளை பயன்படுத்துவதனாலேயே நோய் நிலைமைகள் மோசமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சேவையில் பின்னடைவு
இலவச சுகாதார சேவையில் மக்களுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதனால், அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையானது தற்போது மோசடிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும்
தற்போதைய சுகாதார அமைச்சரின் காலத்தில் இந்த நாட்டில் சுகாதார சேவையில் பின்னடைவு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.