தரமற்ற மருந்துகள் இறக்குமதி! ரகசிய வாக்குமூலத்தை வழங்கிய செயலாளர்
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நீதவானிடம் ரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
குறித்த வாக்குமூலத்தை அவர் இன்று (06) மாளிகாகந்த நீதவானிடம் வழங்கியுள்ளார்.
நீதவான்
ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதாவது வெள்ளிக்கிழமை (மார்ச் 01) தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (ஐவிஐஜி) கொள்முதல் ஊழல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவரைக் கைது செய்துள்ளது.
விளக்கமறியல்
இதையடுத்து மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று கூடுதல் சுகாதார செயலாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற சந்தேக நபர்களிடமிருந்து அவரைப் பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |