பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ரவி குமுதேஷ் : விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரும் முக்கிய தொழிற்சங்க ஆர்வலருமான ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நிறுவன விதிகளை மீறியதற்காக அவரது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பணி இடைநீக்கம் வேட்புமனுவில் கையெழுத்திட்ட திகதியான 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு செல்ல தடை
இதன்படி, இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
ரவி குமுதேஷின் குடியிருப்பு முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அவர் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பணி இடைநீக்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகைகளுக்கும் ரவி குமுதேஷ் உரித்துடையவர் அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
