இலங்கை முழுவதும் தமிழர்களுடையதே..! மூடி மறைக்கப்படும் உண்மைகள்
Tamils
Sri Lanka
By Vanan
இலங்கை முழுவதும் தமிழர்களுடையது. சிங்களம் வந்தமை தொடர்பான தகவல்களை வரலாறுகள் கூறுகின்றன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறிய அவர், ஆனாலும் தமிழர்கள் பெருந்தன்மையாக இலங்கை முழுதும் தங்களது என்று வாதாடவில்லை. வடக்கு கிழக்கையே கோருகிறார்கள் எனக் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் காணப்படும் இடங்களில் அதிகளவான விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தொல்லியல் பாரம்பரிய இடங்கள் எனக் குறிப்பிட்டு அபகரிக்கப்படும் காணிகளில், தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் விகாரைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.