மீள் ஏற்றுமதி “விஷ தேய்காய் எண்ணை” - மாலையில் வருகின்றது கப்பல்
SriLanka
Customs Media Spokesperson
Re-export
By Chanakyan
மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணை இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி