அமைச்சுப்பதவியை தூக்கியெறிய தயாராகும் இராஜாங்க அமைச்சர்
resign
minister post
Priyankara Jayaratne
By Sumithiran
தமது மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் எந்த நேரத்திலும் பதவி விலகத் தயார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன (Priyankara Jayaratne)தெரிவித்துள்ளார்.
இதில் தலைவர்கள் முடிவெடுக்காவிட்டால் பதவிகளை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று அடுத்த தேர்தல் என்ன என்று பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தலைவர்களுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்