மூளை மங்கவில்லை : தற்போதும் இராணுவத்தளபதியாக பணியாற்றத் தயார் : சரத் பொன்சேகா அறிவிப்பு
தலைமை நீதிபதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் பணிக்காலம் நீடிக்கப்படுகிறது என்று சிலர் கூறினாலும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உலகின் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, அனைத்துத் தொழில்களின் பணிக்காலமும் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்றும், வயதானதால் மட்டும் மக்களின் மூளை மழுங்கிப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும்
ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆனபோதிலும், தனது மூளை இன்னும் நன்றாகச் செயல்படுகிறது, தனது கண்களும் காதுகளும் நன்றாகச் செயல்படுகின்றன, மேலும் தன்னால் இன்னும் ஒரு இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சில நாடுகளில், நீதிபதிகளும் இராணுவத் தளபதிகளும் 70 வயது வரை பணியாற்றுகிறார்கள் என்றும், பழைய கலாசாரத்தைச் சார்ந்திருப்பவர்கள் இவை சரிசெய்யப்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |