கணவனின் துரோகத்தால் வாடிய பெண்ணுக்கு அடித்த இரட்டை அதிர்ஷ்டம் - ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி
கணவன் மற்றும் தோழி இருவராலும் துரோகத்துக்கு உள்ளான பெண்ணுக்கு லொட்டரியில் அதிர்ஷ்டவசமாக இரட்டை ஜாக்போட் அடித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கணவனைப் பிரிந்து மகளுடன் கடினமான வாழ்க்கையை வாழ்ந்துவந்த பெண்ணுக்கு லொட்டரியில் ஒரே நேரத்தில் இரண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.
தனது சுயவிவரத்தை வெளியிடாத அப்பெண், தான் மிகவும் நம்பிய தனது கணவர், தன்னுடைய நெருங்கிய தோழியை காதலித்து அவருடன் வாழ தன்னை விட்டுச்சென்றதாகவும், இருவரும் தனக்கு துரோகம் செய்த்தாகவும் தெரிவித்தார்.
ஆனால், தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததும் தனது கணவர் தான் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.
268,000 பவுண்டுகள்
இருவருமே விட்டுச்சென்றப்பின் ஒரு வருடம் கழித்து, இந்த ஜனவரி 17-ஆம் திகதி வெவ்வேறு லொட்டரி குலுக்கல்களில் இரண்டு சீட்டுக்களை வாங்கியுள்ளார்.
இப்போது, அந்த இரண்டிலும் அவர் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அவர் மொத்தம் 268,000 பவுண்டுகள் வென்றார்.இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ.12 கோடி ஆகும்.
மகளின் படிப்புச்செலவுகளுக்கு கூட அவதிப்பட்டுவந்த நிலையில் இந்த பரிசுத்தொகை பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
