இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுவே..! சாணக்கியன் சுட்டிக்காட்டு
இலங்கை கிரிக்கெட்டின் நிலை, நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், "நீண்ட காலத்திற்கு முன்பே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். கிரிக்கெட் மீதான மரியாதையை இலங்கை இழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி டி சில்வா இருந்த போது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். கிரிக்கெட் நிறுவனங்களில் அதே பெயர்கள் எப்படி மாறிவருகின்றன என்பதைப் பார்க்கிறோம்.
தோல்விக்கு காரணம்
இந்த தோல்விகளுக்கான பொறுப்பை தற்போது ஓய்வு பெற்ற மூத்த வீரர்களும் ஏற்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தங்களது சாதனைகளுக்காக விளையாடினர்.
மூத்த வீரர்கள் ஒரேயடியாக வெளியேறினால், இளம் வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போகும். எனவே, இதற்கான பொறுப்பை நாம் கூட்டாக ஏற்க வேண்டும்." என்றார்
மேலும், தொலைதூர மாவட்டங்களில் திறமையான சிறார்கள் இன்னும் கூட தோல் பந்தை தொடாமல் இருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.