இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம்

Sri Lanka Cricket Sri Lankan Peoples Dasun Shanaka
By Dhilak Feb 26, 2026 08:31 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து அணித்தலைவர் தசுன் ஷானக்க கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, அணியைச் சுற்றி நீண்டநாளாக அதிகமான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் நிலவியதாகவும், சில போட்டிகளில் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, முக்கிய வீரர்கள் சிலர் எதிர்கொண்ட உடற்தகுதி சிக்கல்களும் அணியின் செயல்திறனை பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை: சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை: சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்


கடும் எதிர்ப்பு

ரி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை 61 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.அந்தத் தோல்வியுடன், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் இலங்கை மாறியது.

இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம் | Reason Why Sri Lanka Lost In The T20 World Cup

கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிய இலங்கை அணி, உலகக் கிண்ணத்துக்கு முன்பே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்திருந்தது.

எதிர்மறையான கருத்துகள்

“நாம் பலமுறை காண்பதும் கேட்பதும் எதிர்மறையான கருத்துகள்தான். வீரர்களாக நாம் நேர்மறையாக இருக்க முயன்றாலும், வெளியில் நிலவும் சூழல் வேறுபட்டதாக இருக்கிறது,” என ஷானக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் படுதோல்விக்கான காரணம்! அணி தலைவர் பகிரங்கம் | Reason Why Sri Lanka Lost In The T20 World Cup

மேலும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த அவர், மைதானத்திற்கு வெளியே இருந்து பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த உலகக் கிண்ண தொடரில் சிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தொடர்ந்து தோல்வியடைந்த இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அணியைச் சுற்றிய விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026