யாழ்ப்பாணத்தில் பாரிய மாடு கடத்தல் பிடிபட்டது
யாழ்ப்பாணத்தில் தலைவெட்டப்பட்ட நிலையில் நான்கு மாடுகளையும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாலடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடு மற்றும் ஆட்டு இறைச்சியினை வெட்டி வந்துள்ளனர்.
இது தொடர்பில் காவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாடுகளையும் ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |