ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தலைவரின் வேதனத்துக்கு மீண்டும் அனுமதி பெறுமாறு பரிந்துரை!
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரையொன்றினை முன்வைத்துள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உறுப்பினர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான முன்மொழிவு, ஒப்புதலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்ட போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தலைவரின் வேதனம்
அவ்வகையில், நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் தொடர்பில் மீண்டும் அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

அவருக்கு வழங்கப்படும் வேதன அளவு மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் என்பதால் தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள வேதன அளவு தொடர்பில் மீண்டும் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்