சிறுவனுக்கு நேர்ந்த துயரம் -தீவிர விசாரணையில் காவல்துறை
Death
Police
SriLanka
Methagama
By Chanakyan
மெதகம - பெல்லன் ஒயா பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மெதகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் மூழ்கிய சிறுமி கெந்தவின்ன இத்தேகல மக்களால் மீட்கப்பட்டு மெதகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெதகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.