வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு
body
amparai
recovery
elder woman
By Vanan
அம்பாறை - சாய்ந்தமருது காவல்நிலைய பிரிவில் உள்ள, சாய்ந்தமருது பகுதியில் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
75 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரின் தலைப்பகுதியில் காயம் ஒன்று காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன், குறித்த வீட்டில் தனித்திருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்