முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதிரை மரக்குற்றிகள்: காவல்துறையினரால் மீட்பு

Mullaitivu Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Political Development
By Shadhu Shanker May 09, 2024 04:04 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(08)  இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள்.

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை

முதிரை மரக்குற்றிகள் மீட்பு

 மேலும், வனவள திணைக்களம், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதிரை மரக்குற்றிகள்: காவல்துறையினரால் மீட்பு | Recovery Of More Than Hundred Seal Logs Mullaitivu

  இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08) மாலை புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி காவல்துறை மா அதிபர் தனபாலவிற்கு(Dhanapala) தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபரால் முல்லைத்தீவு பிரதான  காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட காவல்துறை அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

 மேலதிக விசாரணை

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதிரை மரக்குற்றிகள்: காவல்துறையினரால் மீட்பு | Recovery Of More Than Hundred Seal Logs Mullaitivu

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020