நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா (Beta thalassemia) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நோய் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா நோய் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08.5.2024) கொழும்பு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விசேட வைத்தியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹீமோகுளோபின் குறைபாடு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தலசீமியா ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு அதிக அளவு இரத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமையை தடுப்பதற்கு நாட்டில் தலசீமியா பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலசீமியா பாதிப்பு
அதன்படி, தலசீமியா கேரியர் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா மேஜர் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச தலசீமியா தினத்தின் கருப்பொருள் “உயிர்களை மேம்படுத்துதல், முன்னேற்றத்தைத் தழுவுதல், தலசீமியா சிகிச்சையை நியாயமானதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல்” என்பதாகும்.
மேலும், திருமணத்திற்கு முன் அனைவருக்கும் தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |