கைவிடப்பட்ட நிலையில் புதிய துப்பாக்கி ரவைகள் மீட்பு!
Srilanka
Recovery
Ampara
abandoned
new ammunition
By MKkamshan
அம்பாறை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் இன்று (17) முற்பகல் புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய பிளாஸ்டிக் வடிவம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் தேடுதல் நடவடிக்கையினை கல்முனை கடற்படையினர் மேற்கொண்டதுடன் குறித்த துப்பாக்கி ரவைகள் புதிதாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கைப்பற்றப்பட்ட ரவைகளை கல்முனை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்