தலைமன்னார் கடற்பரப்பில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு
police
recovered
deathbody
thalaimannar
By Sumithiran
தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 ஆவது தீடைப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி