அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்! வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட புதிய அரச துறை ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள் உட்பட 121,000 பேர் இவ்வாறு அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நிகவெரட்டியவில் நேற்று (11) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
அத்துடன் அரசியல் ரீதியான நியமனங்களுக்குப் பதிலாக, பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், அரச சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் அரச சேவையை வலுப்படுத்துவது அவசியமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதேவேளை ஒவ்வொரு மாகாணத்திலும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் 900க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |