பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் : புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணம்

Sri Lanka Government Gazette Eastern Province Teachers Graduates
By Sathangani Feb 09, 2026 04:57 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் என்று சொல்வதை விட ஏமாற்றப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வெளியான சுற்றுநிருபம் 

அந்த வகையில் இந்த ஆண்டில் அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து மாகாணத்தையும் எடுத்து நோக்கும் போது கிழக்கு மாகாணம் மாத்திரம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் : புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் | Recruitment Of Graduates Into Teaching Service

அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாகக் கூறி அதிகளவான விளம்பரங்கள் விடப்பட்டாலும், உண்மை நிலவரம் இந்த அறிக்கையைப் பார்க்கும் போதே தெரிய வந்துள்ளது.

அந்த அடிப்படையில் இந்த அறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான பாடநெறிகள் தவிர்க்கப்பட்டு மிகவும் குறைந்தளவிலான பாடநெறிகளே அதிலும் கலைப் பாடங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டே இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக எதுவித போட்டிப் பரீட்சைகளுக்கும் உள்வாங்கப்படாமல் இருக்கின்றார்கள்.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பரீட்சைக்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஓன்றிரண்டு பரீட்சைகளுக்கு தோற்றினாலும் குறைந்தளவிலான ஆட்சேர்ப்புகளே இடம்பெற்றுள்ளன. அத்துடன் பல பரீட்சைகள் இதுவரை நடாத்தப்படாமலும் இருக்கின்றன.

2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்கும் எந்தவித போட்டிப் பரீட்சைக்கும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தோற்ற முடியாதவாறான சூழ்நிலை இருக்கின்றன.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் : புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் | Recruitment Of Graduates Into Teaching Service

பல்கலைக்கழகங்களில் அதிகளவான பாடங்கள் இருந்த போதிலும் விரிவுரையாளர்களின் கருத்திற்கிணங்க நாங்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தெரிவு செய்து கற்றும் அப்பாடங்களுக்கான எவ்வித ஆட்சேர்ப்பு முறைகளும் இல்லாமல் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

குறிப்பிடட சில முக்கிய பாடங்களுக்கான பரீட்சைக்கான வாய்ப்புகள் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் எதுவித விசேட சலுகைகளும் கோரவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பினையே நாங்கள் கோருகின்றோம்.

பல பரீட்சைகளுக்கு கட்டணங்கள் செலுத்தியுள்ள போதிலும் வேலைவாய்ப்புகள் எதுவும் காட்டப்படாத நிலையில் எந்த நம்பிக்கையில் பரீட்சைக்கு சமூகமளிப்பது.

எங்களுக்காக ஆதரவு வழங்க வேண்டிய கிழக்கு மாகாண அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் என்று எமக்குத் தெரியவில்லை. இது தொடர்பில் யாரிடம் முறையிடுவதென்று தெரியாத நிலையில் ஊடகங்களை நம்பி வந்துள்ளோம்.

திருகோணமலையில் முளைத்த புத்தர் சிலை: போராட திரளும் பிக்குகள்

திருகோணமலையில் முளைத்த புத்தர் சிலை: போராட திரளும் பிக்குகள்

பரீட்சை எழுதுவதற்குத் தயார்

நாங்கள் பரீட்சைகளைப் புறக்கணிக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்குத் தயாராக இருக்கின்றோம். கடந்த ஆறு வருடங்களாக அதற்கான வாய்ப்புகள் இல்லாமலே தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே உரிய அதிகாரிகள் இதற்கான காரணத்தை எமக்குத் தெரியப்படுத்தி பரீட்சைக்கான வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் : புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் | Recruitment Of Graduates Into Teaching Service

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அவர்கள் எம்மைப் பொறுமையாக இருக்கும் படியாகக் கூறியிருந்தார்கள். நாங்களும் இதுவரை எதுவித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தாமல் இருந்தோம்.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்பு சுற்றுநிருபமும் எமக்கு எதிராகவே இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.

எமக்கு வெளிவந்த அறிக்கையும் முதலில் சிங்களத்தில் மாத்திரமே பெறப்பட்டது தற்போதே அதன் தமிழ் மொழி எமக்குக் கிடைத்துள்ளது. இதனால் எவருடனும் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முடியவில்லை.

திறந்த சுற்றுநிருபத்தின் மூலம் எமக்கான வாய்ப்புகள் அறவே இல்லை. நாங்கள் விசேட சலுகைகள் எதுவும் கேட்கவில்லை. போட்டிப் பரீட்சைகளுக்கான வாய்ப்புகளையே தருமாறு கேட்கின்றோம் என்று தெரிவித்தனர்.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள் : அநுர அரசிடம் நாமல் இடித்துரைப்பு

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள் : அநுர அரசிடம் நாமல் இடித்துரைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026