யாழ். வடமராட்சியில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Jaffna
Law and Order
By Kanooshiya
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அதில் "பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்" என எச்சரிக்கை அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையினால் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



20ம் ஆண்டு நினைவஞ்சலி