திருகோணமலை கடற்கரையில் லட்சக்கணக்கில் கரையொதிங்கிய நண்டுகள்
Trincomalee
Sri Lanka
Tourism
By Shalini Balachandran
திருகோணமலை (Trincomalee) நகரில் உள்ள கடற்கரையில் லட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்று உள்ளது.
இறந்த நண்டுகள்
அத்தோடு, இது தொடர்பான நடவடிக்கையில் திருகோணமலை நகர செயலாளர் ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |