கஜ்ஜா'வுக்கு இறுதியாக அனுப்பிய SMS: சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பயங்கர நபர் கைது
புதிய இணைப்பு
அருண விதானகமகே அல்லது 'கஜ்ஜா' படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய நபராக கருதப்பட்ட 'அச்சினி' அல்லது 'அனுஷா லக்மாலி' 'கஜ்ஜா'வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவரும் தாக்குதலுக்கு முன்னர் கஜ்ஜாவிற்கு இறுதியாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதும் இறுதித் குறுஞ்செய்தியை அனுப்பியதும் இவரே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அச்சினி என்று அழைக்கப்படும் அனுஷா லக்மாலி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், துபாயிலிருந்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) குழுவினரால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மித்தேனிய பகுதியில் 'கஜ்ஜா' மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |