சிவப்பு பட்டியலில் இந்தியா - இணைத்தது பிரிட்டன்
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது பிரிட்டன்.
இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். எனினும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். அவர் பயணத்தை இரத்து செய்த உடனேயே, பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலில் (Red List) இந்தியாவை இணைத்துள்ளது பிரிட்டன்.
இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளதால், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் இந்தியாவில் இருந்து அந்நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடையாது.
‘‘இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்ப்பது கடினமானது. ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளோம்’’ என இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மட் ஹொன்ஹொக் தெரிவித்துள்ளார்.