பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று தீர்மானித்திருந்தன.
முதலாம் இணைப்பு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயத்தை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன (N.K. Jayawardene) தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை
கோதுமை மா கிலோவொன்று சந்தைகளில் தற்போது 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று முதல் நடைமுறையாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.
இந்நிலையில், 10 ரூபா விலை குறைப்பு மூலம் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
