தமிழர் தாயகத்தில் உருவாகும் ஆச்சரியம் - மிரள வைக்கும் அதிசயங்கள்
தமிழர் தாயகத்திலும், சர்வதேச தரத்தில் பொது மக்களின் பொழுது போக்கான இடமாக யாழ். இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்கப்பட்டு வருகிறது.
தாயகப் பகுதியில் பொது மக்கள் தமது நேரத்தை பெரும் இயற்கை எழில் கொஞ்சும் அனுபவத்துடன் கழிப்பதற்கு ஏற்ற இடமாகவும், மன நிம்மதியையும், பெரும் ஆறுதலையும், கொடுக்கும் இடமாகவும் றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், 150 ஏக்கரில் பண்ணையை சுற்றிப் பார்த்து அனுபவிக்க வசதியாக பண்ணை முழுவதும் பயணம் செய்யக்கூடிய பாதைகள், பாலங்கள், சக்கர நாற்காலி பயணம் செய்யக்கூடிய வகையிலான வசதிகள் என்று பல விடயங்களை பார்த்துப் பார்த்து நிர்வாகத்தினர் செய்து கொண்டிருக்கிறாரா்கள்.
தற்போதைய கொவிட் பெருந்தொற்றை கவனத்தில் எடுத்து, சமூக இளைவெளி உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்கள்.
காலையிலிருந்து மாலை வரை எந்நேரத்திலும் பயனுள்ள வகையில் இப்பண்ணையில் மக்கள் பொழுதினை கழிக்க முடியும் என்பதற்கு அனைத்து உத்தரவாதங்களும் இங்கே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதுமாத்திரமன்றி, செயற்கைக்கு முக்கியத்துவம் கொடாது, இயற்கையால் பண்ணை உருவாக்கப்பட்டிருப்பது இங்கே கூடுதல் சிறப்பாக அமைகிறது. உலகம் எங்கும் செயற்கையால் அலங்கரிக்கப்பட்டு, அங்கே பொழுது போக்கு அம்சங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும், 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணையில் அத்தனையும் இயற்கையே. கண்ணை குளிர்ச்சியூட்டும் அம்சங்களால் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இதன் அங்கமாக குதிரை, முயல் போன்ற பிராணிகளை தொட்டுப்பார்க்கும் அனுபவம்.. கோழிக்குஞ்சுகளை துரத்திப் பிடிக்கும் அனுபவம்.. பன்றிக்கூட்டத்தை கிட்டவே கண்டுகளிக்கவும், குளத்தருகே தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் அனுபவம்.
தென்னங் கன்றுகளினுடாக ஓடி.. சந்தனமரச் சோலைகளில் தனித்திருக்கவும், இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும்..- இப்படி பல தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்க்கையின் விழுமியங்களை மீட்டுப் பார்க்கும் வகையிலான பல ஏற்பாடுகளைத் தனதாகக் கொண்டு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
செயற்கைக்குள் வாழ்ந்து பழகிக் கொண்டிருக்கும் நாம், இயற்கை காற்றையும், மன அமைதியையும், நிம்மதியையும் அடைய ஒருமுறை பயணம் செய்தால், மீண்டும் மீண்டும் அங்கே செல்லத் தோன்றும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.






















