பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்! முதலிடத்தில் ஈழத்தமிழர்கள்
பிரித்தானியாவில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் சுமார் 2 இலட்சம் பேர் இலங்கையர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள அதிகளவான தமிழர்கள் லண்டனில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள்
கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் கல்விக்காகவும் தொழில் வாய்ப்புகளை நாடியும் தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
அத்துடன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்களை தொடர்ந்து, பல இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு புலம்பெயர் அகதிகளாக குடிபெயர்ந்தார்கள்.
இதையடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்கமைய, பிரித்தானியாவில் சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
பிறப்பு வீதம்
எவ்வாறாயினும், தெற்காசியாவில் உள்ள இனக்குழுக்களுடன் ஒப்பிடுகையில், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலான பிறப்பு வீதம் மிகவும் குறைவாக உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளை புலம்பெயர் தமிழர்கள் தங்கள் குடும்பங்களில் கொண்டுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற இலங்கை தமிழர்கள்
ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பெருமளவான இலங்கையர்கள் கல்வி அல்லது குடும்ப மறு இணைவு விசாக்கள் மூலம் குடியெர்ந்துள்ளனர்.
இவ்வாறாக புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.
இதனால் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த முதல்கட்ட இலங்கையர்கள், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சேவையாற்றினார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |